தூத்துக்குடியில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு எஸ்.பி. பாராட்டு

தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட 57 போலீசாருக்கு மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் நற்பணி சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
தூத்துக்குடியில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு எஸ்.பி. பாராட்டு
Published on

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களில் இன்ஸ்பெக்டர் உட்பட 57 போலீசார், காவல் நிலைய குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து சொத்துக்களை பறிமுதல் செய்தும், நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தர உதவியாக இருந்தும், சைபர் குற்ற வழக்குகளில் தொழில்நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டு மோசடி செய்யப்பட்ட பணத்தை மீட்டது மற்றும் வழக்கின் விசாரணையை நீதிமன்ற கோப்புக்கு விரைவாக எடுக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதனையடுத்து மேற்சொன்னவாறு கடந்த 2 மாதங்களில் சிறப்பாக பணிபுரிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட 57 காவல் துறையினருக்கு மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் நேற்று மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் வைத்து நற்பணி சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com