தூத்துக்குடியில் சிறப்பாக பணியாற்றிய 6 போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு நினைவு பரிசு: எஸ்.பி. வழங்கினார்


தூத்துக்குடியில் சிறப்பாக பணியாற்றிய 6 போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு நினைவு பரிசு: எஸ்.பி. வழங்கினார்
x

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதங்களில் சிறப்பாக பணியாற்றிய 25 போலீசாருக்கு மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்திற்குள் உள்ள காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு, வழக்கின் விசாரணை, நீதிமன்ற பணி உட்பட அனைத்து பணிகளிலும் சிறப்பாக நடவடிக்கை மேற்கொண்டமைக்காக விளாத்திகுளம், தெர்மல்நகர் ஆகிய காவல் நிலையங்களை மாவட்ட எஸ்.பி. சிறந்த பணிகளின் அடிப்படையில் தேர்வு செய்தார்.

அதேபோன்று காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து சிறப்பாக செயல்பட்டதற்காக புதுக்கோட்டை, சிப்காட் ஆகிய காவல் நிலையங்களும், அதிகமான வழக்குகளை E-filing முறையில் நீதிமன்றத்தில் கோப்புக்கு எடுக்க விரைந்து நடவடிக்கை மேற்கொண்டமைக்காக கோவில்பட்டி மேற்கு மற்றும் குளத்தூர் ஆகிய காவல் நிலையங்களும் தூத்துக்குடி மாவட்டத்திற்குள் தேர்வு செய்யப்பட்டடு, மேற்சொன்ன 6 காவல் நிலையங்களின் சிறப்பான நடவடிக்கைகளுக்காக அந்த காவல் நிலைய இன்ஸ்பெக்டர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் இன்று (04.09.2025) மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.

இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் நிலைய குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து சொத்துக்களை பறிமுதல் செய்தும், சட்டவிரோத விற்பனைக்காக வைத்திருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தும், நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தர உதவியாக இருந்தும், சைபர் குற்ற வழக்குகளில் தொழில்நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டு மோசடி பணத்தை மீட்டும் மற்றும் CCTNS-ல் சிறப்பாக பணிபுரிந்தும் கடந்த மாதம் சிறப்பாக பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட மொத்தம் 25 காவல்துறையினருக்கு மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டினார்.

1 More update

Next Story