

அன்னூர்,
ஏப்ரல் 23-ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில், அவிநாசி சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக போட்டியிடும் மத்திய இணை மந்திரியும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளருமான எல்.முருகன் அவர்களுக்கு ஆதரவாக, அன்னூர் பேருந்து நிலையம் பகுதியில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமை நிலையச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி வாக்கு சேகரித்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக தமிழக மக்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கியமான நலத்திட்டங்கள் குறித்தும், திமுக அரசின் நிர்வாகத் தோல்விகள் குறித்தும் மக்களிடத்தில் எடுத்துரைத்து எஸ்.பி. வேலுமணி பிரசாரம் மேற்கொண்டார்.
இந்தப் பிரசாரக் கூட்டத்தில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஆதரவளித்தார்கள். திமுக அரசின் நிர்வாகத் தோல்விகள் குறித்து மக்களிடத்தில் எடுத்துரைத்து எஸ்.பி. வேலுமணி பிரசாரம் மேற்கொண்டார்.