அதிமுகவில் எஸ்.பி வேலுமணிக்கு மீண்டும் முக்கிய பதவி: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

அதிமுகவில் எஸ்பி வேலுமணிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் எஸ்.பி வேலுமணிக்கு மீண்டும் முக்கிய பதவி:  எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
Published on

அதிமுகவில் எஸ்பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், தங்கமணி உள்ளிட்டோருக்கு மீண்டும் முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதால், வேலுமணி உள்ளிட்டோரின் பதவியை எடப்பாடி பழனிசாமி பறித்த நிலையில், மீண்டும் முக்கிய பொறுப்புகளை வழங்கியுள்ளார். கட்சியில் ஏற்பட்டுள்ள அதிருப்தியை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக எடப்பாடி பழனிசாமி இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதிமுக தலைமை நிலைய செயலாளராக லாகூர் அருணாசலம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். துணைபொதுச்செயலாளர் பொறுப்பில் கேபி முனுசாமி ஏற்கனவே இருந்து வரும் நிலையில் தற்போது எஸ்பி வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் துணை பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதிமுகவின் அமைப்பு செயலாளாராக அன்பழகன், காமராஜ், வீரமணி, பலகிருஷ்ண ரெட்டி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதிமுகவின் அமைப்பு செயலாளராக திருத்தணி கோ.அரி, மருதராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com