

சென்னை,
புகழ்பெற்ற சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள எம்ஜிஎம் தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த 21 நாட்களாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ கருவிகள் மூலம் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை தற்போது சீராக உள்ளது எனவும் அவர் விழிப்புடன் இருக்கிறார். பேசுவதை புரிந்து கொள்கிறார். அவரது உடல்நிலையை மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள் என்று மருத்துவமனை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தது.
இந்த நிலையில், எஸ்.பி பாலசுப்பிரமணியம் உடல் நிலை சீராக உள்ளது எனவும் அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் எஸ்.பி.பி. சரண் தெரிவித்துள்ளார்.