தான் படித்த பள்ளியில் பேசிய அமைச்சர் துரைமுருகன்.. திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அப்சட்

காட்பாடியில் தான் படித்த பள்ளியில் அமைச்சர் துரைமுருகன் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
தான் படித்த பள்ளியில் பேசிய அமைச்சர் துரைமுருகன்.. திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அப்சட்
Published on

காட்பாடி,

காட்பாடியில் தான் படித்த மேல்நிலைப்பள்ளியில் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், அமைச்சர் துரைமுருகன் கடுப்பாகி பேச்சை முடித்துக் கொண்டார்.

அரசு மேல்நிலைப் பள்ளியில் இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பங்கேற்ற நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், 70 ஆண்டுகளுக்கு முன்பு தான் படித்த பள்ளி என்பதால், மலரும் நினைவுகளை பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் நீண்ட நேரம் நின்றுக்கொண்டு காத்திருந்தார். மின் இணைப்பு வராததால் கடுப்பான அமைச்சர், இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டார். பின்னர், அவசர அவசரமாக மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கிவிட்டு சென்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com