

சென்னை
சட்டசபையில் தலைவர்களை புகழந்து பேசுவதில் நேரத்தை வீணாக்க வேண்டாம், மீறி பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின்போது தி.மு.க. எம்.எல்.ஏ ஐயப்பன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசினார். இதற்கு கண்டனம் தெரிவித்த மு.க.ஸ்டாலின், ''மானியகோரிக்கை மீதான விவாதத்தில் தன்னை புகழ்ந்து பேசினால் தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
நேற்றே அவை நேரத்தை வீண்டிக்க வேண்டாம் என எச்சரித்தேன். எதையும் லிமிட் ஆக வைத்துக்கொள்ளுங்கள். நேற்றே இது தொடர்பாக கட்டளையிட்டேன்'' என்று அவர் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.