காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை
Published on

கரூர் மாவட்டம், தவிட்டுப்பாளையம் அருகே நஞ்சை புகழூரில் உள்ள பாகவள்ளி அம்பிகை சமேத மேகபாலீஸ்வரர் கோவிலில் ஆனி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் காலபைரவர், பாகவள்ளி அம்பிகை சமேத மேகபாலீஸ்வரர் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காலபைரவர், பாகவள்ளி அம்பிகை சமேத மேகவாலீஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதேபோல் திருக்காடுதுறை மாதேஸ்வரி அம்பிகை உடனுறை மாதேஸ்வரன் கோவில், புன்னம்சத்திரம் அருகே புன்னம் பகுதியில் உள்ள புன்னைவனநாதர் உடனுறை புன்னைவன நாயகி கோவில், குந்தாணிபாளையம் நத்தமேட்டில் உள்ள ஈஸ்வரன் கோவில் மற்றும் நொய்யல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் ஆனிமாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு காலபைரவர் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.  

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com