முனியப்ப சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம்

முனியப்ப சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
முனியப்ப சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம்
Published on

நொய்யல் அருகே முனிநாதபுரத்தில் உள்ள காவேரி ஆற்றங்கரை அருகே முனியப்ப சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையையொட்டி சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும் பக்தர்கள் கோவில் பூசாரியிடம் பூ போட்டு குறிக்கேட்டு சென்றனர்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com