அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்

அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்
Published on

புன்னம் சத்திரம் அருகே கரியாம்பட்டி உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சித்திரை மாத வெள்ளிக்கிழமை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

இதேபோல் சேமங்கி, அத்திப்பாளையம், உப்பு பாளையம், புன்னம், தவுட்டுப்பாளையம், திருக்காடுதுறை, நன்செய் புகழூர் உள்பட நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com