அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்

அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்
Published on

 நொய்யலில் பிரசித்தி பெற்ற செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர், சந்தனம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்துது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

வேலாயுதம்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு பால், சந்தனம், மஞ்சள் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடந்தது.

தோகைமலை அருகே நாகநோட்டக்காரன்பட்டியில் உள்ள காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு பால், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி உள்பட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.

இதேபோல் நொய்யல், வேலாயுதம்பாளையம், தோகைமலை பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களிலும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com