முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்

முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்
Published on

நன்செய் புகழூர் அக்ரஹாரத்தில் உள்ள சுப்பிரமணியர் சுவாமிக்கு கிருத்திகையை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

வெள்ளியணை அருகே உள்ள காணியாளம்பட்டி காணிகளத்தூர் முருகன் கோவிலில் நேற்று கிருத்திகையை முன்னிட்டு முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.பின்னர் பல்வேறு மலர் மாலைகளுடன் சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. இந்த பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com