

தீபாவளி பண்டிகை முடிந்து நாளை (திங்கட்கிழமை) தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இதனால், திங்கட்கிழமை பள்ளி, கல்லூரிகளில், அரசு அலுவ லகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் விடுமுறை விடப்பட்டுள்ளன. இத னால், தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு வந்து விட்டு வெளியூர் செல்பவர்கள் ரெயில்களிலும், பஸ்களிலும் செல்கின்றனர். இதற்காக மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
அதேபோல, சென்னைக்கு சிறப்பு ரெயில்களும் இயக்கப்படுகின்றன. பொதுவாக ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்களில் மதுரை ரெயில் நிலையத்தில் பயணிகளின் கூட்டம் அலைமோதுவது வழக்கம். இந்த முறை தீபாவளி பண்டிகை முடிந்து சென்னை செல்லும் பயணிகள் கூட்ட நெரிசல் அதிகளவு இருக் கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக தென்மாவட்டங்களில் இருந்து சுமார் 4-க்கும் மேற்பட்ட சிறப்பு ரெயில் கள் இயக்கப்படுகின்றன. செங்கோட்டை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய ஊர்களில் இருந்து மதுரை வழியாக வழக்கமாக செல்லும் ரெயில்களு டன் சிறப்பு ரெயில்களும் இயக்கப்படுவதால் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும். மேலும், மதுரை ரெயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருவதால் அனைத்து பிளாட்பாரங்களிலும் கட்டுமான பணிகளால் பயணிக ளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
இந்த கட்டுமான பணிகள் பயணிகளுக்கான பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படாமல் விதிமீறலுடன் நடந்து வருகிறது. எனவே, பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.
இதற்காக வர்த்தக பிரிவு சார்பில் கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் உதவியுடன் கண்காணிப்பு பணியில் ஈடுப டுத்தப்பட்டுள்ளனர். பயணிகளுக்கான அவசர உதவி எண்களும், முதலுதவி சிகிச்சை மையங்களும் பிளாட்பாரங்களில் அமைக்கப்பட்டுள்ளன.