

சென்னை,
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடை மேடை 10,11-ல் மேற்கொள்ளப்படும் மறுசீர மைப்பு பணிகள் காரணமாக, கடந்த 20-ந்தேதி முதல் ஏப்ரல் 5-ந்தேதி வரையில் 45 நாட்கள் மின்சார ரெயில் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக பயணிகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். எனவே. பயணிகளின் சிரமத்தை போக்கும் வகையில், சிறப்பு பஸ் இயக்க தெற்கு ரெயில்வே முடிவு செய்தது. வருகிற 28-ந்தேதி முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட இருப்பதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் பயணிகளின் வசதிக்காக கூட்ட நெரிசல் மிகுந்த நேரத்தில் (பீக் அவர்ஸ்) தாம்பரம் - கடற்கரை, கடற்கரை - தாம்பரம் இடையே நேற்று முதலே 20 சிறப்பு பஸ் சேவைகள் தொடங்கப்பட்டன. இந்த சிறப்பு பஸ்கள் முன்பு 'தெற்கு ரெயில்வே ஒப்பந்த பஸ்' என ஆங்கிலத்தில் அறிவிப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு உள்ளது.
இந்த சேவையை தடையின்றி செயல்படுத்த அனைத்து முக்கிய வழித்தடங்களிலும் பயணிகளுக்கு வழிகாட்டவும், உதவவும் ரெயில்வே டிக்கெட் பரிசோதகர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் பயணிகளுக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். இவர்கள் பயணிகளின் கூட்டத்தை நெறிப்படுத்தவும், பஸ்களில் பயணம் செய்யும் பயணிகளிடம் மின்சார ரெயில்களுக்கான டிக்கெட் மற்றும் மாதாந்திர பாஸ் உள்ளதாக என்பதை சோதனை செய்து வருகின்றனர். 2-வது நாளாக இந்த வசதியை பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த பஸ் சேவை மின்சார ரெயில் டிக்கெட் மற்றும் மாதாந்திர பாஸ் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதன் மூலம் மின்சார ரெயில் பயணிகள் நெரிசல் நேரங்களில் எவ்வித தடையும் இல்லாமல் பயணத்தை மேற்கொள்ள முடியும். தாம்பரம்-கடற் கரை இடையே இருமார்க்கமாகவும் காலை மற்றும் மாலை நேரங்களில் இயக்கப்படும் சிறப்பு பஸ்களை பயணிகள் தேவைக்கு ஏற்ப பயண்படுத்தி கொள்ளுமாறு தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பஸ்களுக்கு தாம்பரம் சானடோரியம், குரோம்பேட்டை, பல்லாவரம், திரிசூலம், கிண்டி, எழிலகம், தலைமை செயலகம், பாரிமுனை ஆகிய நிறுத்தங்கள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் நேரங்கள் விவரம் வருமாறு:-
நேர அட்டவணை
6.30, 6.37, 6.44, 6.58, 7.05, 7.12, 7.26, 7.33, 7.40, 7.54, 8.01, 8.15, 8.22, 8.29, 8.43 ஆகிய நேரங்கில் இயக்கப்படும் சிறப்பு பஸ் சேவை கள் கிண்டி, அண்ணாசாலை, சேப்பாக்கம், தலைமை செயலகம் வழியாக கடற்கரைக்கு இயக்கப்படும். மேலும், தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 6.51, 7.19, 7.47, 8.08, 8.36 ஆகிய நேரங்கில் இயக்கப்படும் சிறப்பு பஸ் சேவைகள் கிண்டி, தியாகராயநகர், எழும்பூர், சென்டிரல், பாரிமுனை வழியாக கடற்கரைக்கு இயக்கப்பட்டு வருகிறது.
இதேபோல, சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து மாலை 5, 5.07, 5.14, 5.28, 5.35, 5.42, 5.56, 6.03, 6.10, 6.24, 6.31, 6.45, 6.52, 6.59, 7.13 की फ्री படும் பஸ் சேவைகள் தலைமை செயலகம், சேப்பாக்கம், அண்ணாசாலை, கிண்டி வழியாக வும், சென்னை கடற்கரையில் இருந்து மாலை 5.21, 5.49, 6.17, 6.38, 7.06 ஆகிய நேரங் களில் இயக்கப்படும் பஸ் சேவைகள் பாரிமுனை, சென்டிரல், எழும்பூர், தியாகராய நகர், கிண்டி வழியாக தாம்பரத்துக்கு இயக்கப்பட்டு வருகிறது.