நெல்லையில் இருந்து சபரிமலைக்கு சிறப்பு பஸ்கள்: நாளை முதல் இயக்கம்

சிறப்பு பஸ்களை www.tnstc.in என்ற இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லையில் இருந்து சபரிமலைக்கு சிறப்பு பஸ்கள்: நாளை முதல் இயக்கம்
Published on: 

நெல்லை,

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் நெல்லை மண்டலத்தின் சார்பில் கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்கு ஏற்ப சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

அதன்படி நாளை (திங்கட்கிழமை) முதல் வருகிற 20.1.2027 வரை நாகர்கோவிலிலிருந்து தக்கலை, மார்த்தாண்டம், களியக்காவிளை, திருவனந்தபுரம், கொட்டாரக்கரை, அடூர், பத்தனம்திட்டா, நிலக்கல் வழியாக பம்பாவிற்கு 4 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

இந்த பஸ்கள் முறையே நாகர்கோவிலில் இருந்து இரவு 7 மணி, 7.30 மணி, 8 மணி, 8.30 மணிக்கு புறப்படுகிறது. பம்பாவிற்கு முறையே அதிகாலை 3 மணி, 3.30 மணி, 4 மணி, 4.30 மணிக்கு சென்றடைகிறது.

அதனை போன்று பம்பாவிலிருந்து காலை 7 மணி, 7.30 மணி, 8 மணி, 8.30 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவிலுக்கு மாலை 3 மணி, 3.30 மணி, 4 மணி, 4.30 மணிக்கு வந்தடையும். சபரிமலை தேவஸ்தானம் அறிவிப்பின்படி, வருகிற 27.12.2026 முதல் 30.12.2026 அன்று மாலை 5 மணி வரை கோவில் நடை சாத்தப்படுவதால் 26.12.2026 முதல் 29.12.2026 வரை இச்சிறப்பு பஸ்கள் இயக்கப்படமாட்டாது.

மேலும், பயணிகள் இச்சிறப்பு பஸ்களை www.tnstc.in என்ற இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X