

இந்நிலையில், சென்னையில் இருந்து வெளியூர் செல்ல அக்டோபர் 15 முதல் 17 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.
தீபாவளிக்கு சென்னையில் இருந்து வெளியூர் செல்ல 5 இடங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
சென்னையில் கோயம்பேடு, அண்ணாநகர் மேற்கு, தாம்பரம் சானடோரியம், கே.கே. நகர், பூந்தமல்லியில் இருந்து இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து நாள் ஒன்றுக்கு 4,820 பேருந்துகள் வெளியூர்களுக்கு இயக்கப்படும். வழக்கம்போல் இயக்கப்படும் 2,275 பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும்.