தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கம்: அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு

 பல்வேறு இடங்களுக்கும் சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கம்:  அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு
Published on

சென்னை, 

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

தமிழ் வருடப்பிறப்பு மற்றும் வார விடுமுறை என தொடர்விடுமுறையை முன்னிட்டு சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 10-ந் தேதி  வெள்ளிக்கிழமை

575 பஸ்களும், 11-ந் தேதி சனிக்கிழமை 395 பஸ்களும் சிறப்புபஸ்களாக இயக்கப்பட உள்ளன.

சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 10-ந் தேதி 100 பஸ்களும், 11-ந் தேதி 90 பஸ்களும்

இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், மாதாவரத்திலிருந்து 10 மற்றும் 11-ந் தேதிகளில் 24 பஸ்களும் மற்றும் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், ஞாயிறு மற்றும் செவ்வாய் கிழமைகளில் சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் 12-ந் தேதி மற்றும் 14-ந் தேதி ஆகிய நாட்களில் 735 சிறப்பு பஸ்கள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

இச்சிறப்பு பஸ் இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பஸ் நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

X

Daily Thanthi
www.dailythanthi.com