தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கம்

கோப்புப்படம்
தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக அரசு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.
சென்னை,
உலக பிரசித்தி பெற்ற காசிக்கு நிகரான புண்ணிய ஸ்தலமாக விளங்கிவரும் ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள ராமநாதசுவாமி கோவில் அருகில் உள்ள அக்னி தீர்த்தம் கடலில், அமாவாசை நாட்களில் தங்களுடைய முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்க லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.
இந்நிலையில், ஆண்டுதோறும் வரக்கூடிய முதல் மூன்று அமாவாசையில் ஒன்றான தை அமாவாசை வரும் 29-ம் தேதி புதன்கிழமை வருகிறது. அன்று பஸ்களில் அதிகளவில் பக்தர்கள் வந்து தங்களுடைய முன்னோர்களுக்கு அக்னி தீர்த்தம் கடற்கரையில் திதி, தர்ப்பணம் கொடுத்து விட்டு பின்பு ராமநாதசுவாமி கோவிலுக்குள் இருக்கும் 22 தீர்த்த கிணறுகளிலும் நீராடிவிட்டு ராமநாதசுவாமி பர்வதவர்த்தினி அம்பாளை வழிபட்டு செல்வார்கள்
இந்நிலையில் போக்குவரத்து துறையின் மூலம் சென்னையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதன்படி வரும் 28-ம் தேதி சென்னை மற்றும் பிற இடங்களில் இருந்து ராமேஸ்வரத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதன்படி கிளாம்பாக்கம், சேலம், கோவை, பெங்களூருவில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது. மேலும் வரும் 29-ம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து கிளாம்பாக்கம், சேலம், கோவை, பெங்களூருவுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.






