அம்பத்தூரில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிலுக்கான சிறப்பு தொழில் கடன் விழா

அம்பத்தூரில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிலுக்கான சிறப்பு தொழில் கடன் விழா 17-ந்தேதி தொடங்கி 2-ந்தேதி வரை நடக்கிறது. திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அம்பத்தூரில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிலுக்கான சிறப்பு தொழில் கடன் விழா
Published on

தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மாநில அளவில் செயல்பட்டு வரும் ஒரு தமிழ்நாடு அரசு நிதி கழகம் ஆகும். 1949-ம் ஆண்டு தொடங்க பெற்ற இந்த கழகம் மாநில அரசின் ஆதரவுடன் இதுவரை எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு கடன் உதவி வழங்கிய தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாக திகழ்கிறது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில், சேவை பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை, சேவை நிறுவனங்களை நிறுவுவதற்கும் தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் பிரிவுகளை விரிவு படுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்பு திட்டங்களின் கீழ் கடன் உதவி வழங்கி வருகிறது.

அம்பத்தூர் கிளை அலுவலகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் விழா வருகிற 17-ந்தேதி தொடங்கி 2-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த சிறப்பு தொழில்கடன் விழாவில் பல்வேறு திட்டங்களின் சிறப்பம்சங்கள், மத்திய, மாநில அரசுகளின் மானியங்கள், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனம் மேம்பாட்டு திட்டம் போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது. தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீத முதலீட்டு மானியம் ரூ.1 கோடி வரை வழங்கப்படும். இந்த விழா காலத்தில் சமர்ப்பிக்கப்படும் பொதுக்கடன்கள் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை அளிக்கப்படும்.

இந்த அரிய வாய்ப்பினை புதிய தொழில் முனைவோர், தொழிலதிபர்கள் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றும் மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com