

கலெக்டர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்விற்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றது. அவ்வகையில் நாள்தோறும் பள்ளி, கல்லூரி, மருத்துவம் மற்றும் தொழில் சார்ந்த பணிகளுக்காக செல்லும் மாற்றுத்திறனாளிகளுக்கு அவ்வழிதடங்களுக்கான இலவச பஸ் பயணச்சலுகை அட்டை வழங்கி வருகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பஸ் பயண சலுகை அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் மாவட்ட மாற்று திறனாளிகள் அலுவலகத்தில் நடைபெறுகிறது.சிவகங்கை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பஸ் பயண சலுகை அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் மாவட்ட மாற்று திறனாளிகள் அலுவலகத்தில் நடைபெறுகிறது.அதன்படி பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு 30-ந் தேதியும், மற்ற வகை மாற்றுத்திறனாளிகளுக்கு 31-ந் தேதியும் முகாம் நடக்கிறது. இதில் பங்கேற்க மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை அசல், நகல்-1, யு.டி.ஐ.டி. நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-4, குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் வாக்காளர் அட்டை நகல், பணிபுரியும் நிறுவன சான்று, கல்வி நிறுவனம் சான்று சுயதொழில் சான்று, கடந்த நிதியாண்டு பெற்ற பஸ் பயணச்சலுகை அட்டை அசல் போன்ற சான்றுகளுடன் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.