இன்று சிறப்பு முகாம்

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்று சிறப்பு முகாம்
இன்று சிறப்பு முகாம்
Published on

நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதையொட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நெல்லை மாவட்டத்தில் உள்ள 1,483 வாக்குச்சாவடிகளில் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இந்த முகாமில் அனைத்து வாக்காளர்களும், தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்து பயன் அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பொது மக்கள் தங்களது முகவரிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு தங்களது ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையுடன் சென்று அங்கு பணியில் இருக்கும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் படிவம்-6 பி பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

மேலும் http://www.nvsp.in/ என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது play store-ல் Voter's Help Line App பதிவிறக்கம் செய்து வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com