வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சென்னையில் சிறப்பு முகாம்கள்

சென்னை தேர்தல் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.
சிறப்பு முகாம்கள்
Published on: 

சென்னை,

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்ட மற்றும் தகுதிவாய்ந்த இளைஞர்கள் / முதன்முறை வாக்காளர்களின் பெயர்களை பதிவு செய்வதற்கு சென்னை தேர்தல் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.

சிறப்புத் தீவிர திருத்தம்

இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

இந்திய தேர்தல் ஆணையமானது தனது 29.09.2026-ல் தெரிவித்த கடிதத்தின் வாயிலாக, சிறப்புத் தீவிர திருத்தப் பணி (SIR) ஏற்கனவே நிறைவடைந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, தொடர் திருத்த நடைமுறையின் கீழ், விடுபட்ட வாக்காளர்கள் மற்றும் இளம் / முதல் முறையாகத் தகுதி பெறும் வாக்காளர்களை பதிவு செய்வதற்கான சிறப்பு முகாமினை தலைமைத் தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். மேலும், படிவம் 6-உடன் இணைக்கப்பட்டுள்ள ”உறுதிமொழிப் படிவம்” (Declaration Form), சிறப்புத் தீவிர திருத்த (SIR) காலக்கட்டத்தில் மட்டுமே பயன்படுத்தப்படும். சிறப்புத் தீவிர திருத்தம் அல்லாத காலக்கட்டங்களில், வாக்காளர் பதிவு விதிகள் 1960-ன்படி பொருந்தக்கூடிய படிவங்கள் பயன்படுத்தப்படும்.

சிறப்பு முகாம்கள்

இது தொடர்பாக, இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்ட மற்றும் தகுதிவாய்ந்த இளைஞர்கள் / முதன்முறை வாக்காளர்களின் பெயர்களை பதிவு செய்வதற்கு சென்னை தேர்தல் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.

மேற்கண்ட தகவலை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com