கோவையில் அனைத்து பள்ளிகளிலும் இன்று "சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது" - வெளியான அறிவிப்பு

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை தொடர்ந்து வருகிறது.
கோவையில் அனைத்து பள்ளிகளிலும் இன்று "சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது"  - வெளியான அறிவிப்பு
Published on: 

கோவை,

இன்று கனமழை பெய்யக்கூடும் என்பதால் கோவையில் சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கனமழை

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது புயலாக வலுவடைந்து, ஆந்திரா-ஒடிசா கடற்கரைப் பகுதிகளை நோக்கி நகரும் என்றும், தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை தொடர்ந்து வருகிறது.

சிறப்பு வகுப்புகள்

இந்நிலையில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்பதால் கோவையில் அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாவும், மாணவர்களுக்கு இன்று (அக்.24) சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்றும் அம்மாவட்ட கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com