‘குழந்தை தொழிலாளர் விவகாரத்தை கண்காணிக்க சிறப்பு குழு’ - அமைச்சர் பர்வேஸ் தகவல்

தொழில் நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர்கள் பயன்படுத்தப்படுவதை த.வெ.க. அரசு அனுமதிப்பதில்லை என அமைச்சர் பர்வேஸ் தெரிவித்துள்ளார்.
‘குழந்தை தொழிலாளர் விவகாரத்தை கண்காணிக்க சிறப்பு குழு’ - அமைச்சர் பர்வேஸ் தகவல்
Published on

சென்னை,

தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பர்வேஸ் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

“தொழில் நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர்கள் பயன்படுத்தப்படுவதை த.வெ.க. அரசு அனுமதிப்பதில்லை. குழந்தை தொழிலாளர் முறை முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் என்பதே நமது நிலைப்பாடு.

வெளியில் தெரியாமல் தொழிற்சாலைகளில் மறைவாக குழந்தை தொழிலாளர்கள் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், அதை கண்காணிப்பதற்கு சிறப்பு குழு அமைத்து கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

குழந்தை தொழிலாளர்கள் பற்றிய தகவல் ஊடகங்களுக்கு தெரியவந்தாலும், அதை அரசிடம் தெரிவிக்கலாம். இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்படி, சுமார் 70 குழந்தை தொழிலாளர்கள், கொத்தடிமைகளாக வைக்கப்பட்டிருந்த 150 பேர் ஆகியோர் மீட்கப்பட்டுள்ளனர்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com