சென்னை தீவுத்திடலில் தீபாவளி சிறப்பு பட்டாசு விற்பனை வருகிற நவம்பர் 3-ஆம் தேதி தொடங்குகிறது

சிவகாசியில் பல பட்டாசு தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் உற்பத்தி பாதிக்கப்பட்டு, தேவையான அளவுக்கு பட்டாசுகள் வரத்து இல்லை.
சென்னை தீவுத்திடலில் தீபாவளி சிறப்பு பட்டாசு விற்பனை வருகிற நவம்பர் 3-ஆம் தேதி தொடங்குகிறது
தீவுத்திடல்
Published on: 

சென்னை,

சென்னை தீவுத்திடலில் தீபாவளி சிறப்பு பட்டாசு விற்பனை வருகிற நவம்பர் 3-ஆம் தேதி தொடங்குகிறது.

30 கடைகள்

நீதிமன்ற வழக்கு காரணமாக இந்த ஆண்டு கடைகள் திறப்பதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், ஐகோர்ட்டு உத்தரவின்படி மொத்தம் 30 கடைகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மூலம் இதற்கான டெண்டர் விடப்பட்டு, தற்போது கடைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

சென்னை பட்டாசு வியாபாரிகள் சங்க செயல் தலைவர் ஷேக் அப்துல்லா தெரிவித்ததாவது:-

விற்பனை காலம்

பட்டாசு விற்பனை நவம்பர் 3-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10-ஆம் தேதி வரை நடைபெறும். இந்த ஆண்டு பட்டாசுகளின் விலை 10 முதல் 15 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. சிவகாசியில் பல பட்டாசு தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் உற்பத்தி பாதிக்கப்பட்டு, தேவையான அளவுக்கு பட்டாசுகள் வரத்து இல்லை.

வியாபாரிகளின் அறிவுரை

விரும்பிய பட்டாசு ரகங்கள் தீர்ந்துவிடுவதற்கு முன்பு, முன்கூட்டியே வந்து வாங்கிச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடைசி நாள் வரை காத்திருப்பதை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், இந்த ஆண்டு புதிய பட்டாசு ரகங்களின் வரத்து மிகவும் குறைவாகவே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X