கிளாம்பாக்கம் செல்வோர் வசதிக்காக தாம்பரம்-கூடுவாஞ்சேரி இடையே சிறப்பு மின்சார ரெயில்கள்


கிளாம்பாக்கம் செல்வோர் வசதிக்காக தாம்பரம்-கூடுவாஞ்சேரி இடையே சிறப்பு மின்சார ரெயில்கள்
x
தினத்தந்தி 29 Sept 2025 4:58 PM IST (Updated: 29 Sept 2025 5:02 PM IST)
t-max-icont-min-icon

கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் செல்ல ஏதுவாக சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.

சென்னை,

பள்ளி விடுமுறை, ஆயுதப் பூஜை மற்றும் காந்தி ஜெயந்தி விடுமுறையை ஒட்டி சென்னையில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, பேருந்து மூலமாக சொந்த ஊர் செல்லும் மக்கள், கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து பேருந்தில் பயணம் செய்வார்கள்.

அவ்வாறு பயணம் செய்யும் பயணிகள், எளிதில் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் செல்ல ஏதுவாக, தாம்பரத்தில் இருந்து கூடுவாஞ்சேரிக்கு இரு சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி, தாம்பரத்தில் இருந்து இன்று இரவு 7.45 மணிக்கு புறப்படும் சிறப்பு மின்சார ரெயில், 20 நிமிடத்தில் கூடுவாஞ்சேரி சென்றடையும், மற்றொரு சிறப்பு மின்சார ரெயில் இரவு 8.10 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story