முன்கள பணியாளர்களுக்கு சிறப்பு செய்யும் நிகழ்வு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு,கொரோனா தொற்றில் இருந்து மீண்ட 63 மாநகராட்சி முன்கள பணியாளர்களுக்கு சிறப்பு செய்யும் நிகழ்சியில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
முன்கள பணியாளர்களுக்கு சிறப்பு செய்யும் நிகழ்வு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
Published on

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 98 வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை வீட்டிலேயே கொண்டாடுங்கள் என்று திமுக தொண்டர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த நிலையில், முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு,கொரோனா தொற்றில் இருந்து மீண்டு மீண்டும் பணிக்கு வந்த 63 மாநகராட்சி முன்கள பணியாளர்களுக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி திருவிக மண்டலத்தில் இன்று நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

இதில் கொரோனா தொற்றில் இருந்து மீண்ட முன்கள பணியாளர்களுக்கு 2,500 ருபாய் பணமும், அரிசி, பருப்பு, உள்ளிட்ட மளிகை பொருட்கள், முககவசம், கிருமி நாசினி உள்ளிட்ட பொருட்களை முதல்-அமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், சென்னை மாநகராட்சி ஆணையர், அமைச்சர் கே.என்,நேரு, சேகர் பாபு, திருவிக நகர் எம்.எல்.ஏ உள்ளிட்டோர் முதல்-அமைச்சருடன் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com