அகமதாபாத்தில் இருந்து திருச்சிக்கு சிறப்பு விரைவு ரெயில் இயக்கம்

இந்த ரெயிலின் மூலம் சென்னை, திருப்பதி (ரேணிகுண்டா), புனே, கல்யாண், (மும்பை), சூரத் வழியாக அகமதாபாத் போன்ற ஊர்களுக்கு செல்லலாம்.
அகமதாபாத்தில் இருந்து திருச்சிக்கு சிறப்பு விரைவு ரெயில் இயக்கம்
Published on

பாபநாசம்,

அகமதாபாத்தில் இருந்து சூரத், புனே, சென்னை, விழுப்புரம், மயிலாடுதுறை வழியாக திருச்சிக்கு சிறப்பு விரைவு ரெயில் வண்டி (வண்டி எண்: 09419/09420 வருகின்ற ஜனவரி மாதம் 29-ந்தேதி வரை இயக்கப்படுகிறது. இந்த ரெயில் இரு மார்க்கங்களிலும் பாபநாசத்தில் நின்று செல்லும்.

இந்த ரெயில் வருகின்ற 25.12.22, 1.1.23, 8.1.23, 15.1.23, 22.1.23, 29.1.23 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் திருச்சியிலிருந்து காலை 5.45 மணிக்கு புறப்பட்டு பாபநாசத்திற்கு காலை 7.25-க்கு வந்து சேரும், பின்னர் சென்னை வழியாக அகமதாபாத்திற்கு புறப்படும். மறுமார்க்கத்தில் 23.12.22, 30.12.22, 6.1.23, 13.1.23, 20.1.23, 27.1.23 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் சென்னையில் இருந்து மாலை 4.25 மணிக்கு புறப்பட்டு இரவு 11.45-க்கு பாபநாசம் வந்து சேரும்.

இந்த வண்டியின் மூலம் சென்னை, திருப்பதி (ரேணிகுண்டா), புனே, கல்யாண், (மும்பை), சூரத் வழியாக அகமதாபாத் போன்ற ஊர்களுக்கு செல்லலாம். சீரடி மற்றும் ராகவேந்திரர் மடம் அமைந்துள்ள மந்திராலயம் செல்லும் பக்தர்களுக்கு இந்த ரெயில் இணைப்பு வண்டியாக இருக்கும். இத்தகவலை திருச்சி தென்னக ரெயில்வே கோட்ட ஆலோசனை குழு உறுப்பினரும் பாபநாசம் ரெயில் பயணிகள் சங்க செயலாளருமான சரவணன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com