பிரமாண்ட அரங்கில் சிறப்பு வசதி.. தீவிரமாக தயாராகும் அதிமுக பொதுக்குழு ஏற்பாடுகள்...!

சென்னை, வானகரத்தில் அதிமுக பொதுக்குழு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
பிரமாண்ட அரங்கில் சிறப்பு வசதி.. தீவிரமாக தயாராகும் அதிமுக பொதுக்குழு ஏற்பாடுகள்...!
Published on

சென்னை,

அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 ஆம் தேதி சென்னை வானரகத்தில் நடைபெறவுள்ளது. பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வானகரத்தில் அதிமுக பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், 36,000 சதுர அடியில் இரும்பு சீட்டுகளால் பிரமாண்டமான அரங்கம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மழை பெய்தால் தண்ணீர் தேங்காமல் இருக்க சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.

தரை முழுவதும் ஒரு அடிக்கு உயரமான மரப்பலகையால் தளம் அமைக்கப்பட்டு வருகிறது. மின் விளக்குகள், அலங்கார விளக்குகள் அமைக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த ஏற்பாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com