தமிழ்நாட்டில் மனமகிழ் மன்றங்களுக்கான சிறப்பு கட்டணம் இருமடங்காக உயர்வு

தமிழ்நாட்டில் மனமகிழ் மன்றங்களுக்கான சிறப்பு கட்டணம் இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மனமகிழ் மன்றங்களுக்கான சிறப்பு கட்டணம் இருமடங்காக உயர்வு
Published on

சென்னை,

தமிழ்நாட்டில் எஃப்எல்-2 மனமகிழ் மன்றங்களுக்கான சிறப்புக் கட்டணத்தை இருமடங்காக உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மனமகிழ் மன்றங்கள் தொடங்க சிறப்புக் கட்டணமாக ரூ.15 லட்சம் இருந்த நிலையில் தற்போது அதனை ரூ.30 லட்சமாக உயர்த்தி அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது.

மதுபான உரிமத்திற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.10,000 உரிமக் கட்டணம் ரூ.30,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 10 லட்சத்திற்கும் அதிக மக்கள்தொகை கொண்ட மாநகராட்சிகளுக்கு ரூ.25 லட்சம், நகராட்சிகளுக்கு ரூ.15 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 10 லட்சத்திற்கு குறைவான மக்கள்தொகை கொண்ட மாநகராட்சிகளுக்கு ரூ.20 லட்சம் என நிர்ணயம் அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com