போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு

ஓய்வூதியர்களுக்கு ரூ.2446 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு
Published on

சென்னை,

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கான பலன்களை வழங்க சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு ரூ.2446 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

2024 ஏப்ரல் முதல் 2026 மார்ச் வரை ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் 6,867 பேருக்கு சிறப்பு பலன்கள் வழங்க நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளது. வருங்கால வைப்பு நிதி, விடுப்பு ஒப்படைப்பு, பணிக்கொடைக்கு என ரூ. 2,446 கோடிக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com