சிறப்பு கிராம சபை கூட்டம்

திருக்கடையூரில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
சிறப்பு கிராம சபை கூட்டம்
Published on

திருக்கடையூர்:

திருக்கடையூரில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் சமூகத் தணிக்கை தொடர்பான சிறப்பு கிராம சபை கூட்டம் பெருமாள் கோவில் தெருவில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதிசிவராஜ் தலைமை தாங்கினார். இதில் 2020- 2021- 2022-ம் நிதி ஆண்டிற்கான வரவு செலவு குறித்து பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. இதில் சமூக தணிக்கை அலுவலர்கள், ஊராட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதேபோல் பிள்ளை பெருமாள் நல்லூர் மடப்புரம், டி. மணல்மேடு ஆகிய ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com