சிறப்பு கிராமசபை கூட்டம்

தேன்பொத்தை ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்தது. இதில் கலெக்டர் துரை ரவிச்சந்திரன் கலந்து கொண்டார்.
சிறப்பு கிராமசபை கூட்டம்
Published on

கடையநல்லூர்:

தென்காசி மாவட்டம் செங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தேன் பொத்தை ஊராட்சி பண்பொழி திருமலை கோவில் மலை அடிவாரத்தில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொதுமக்களின் குறைகளை கேட்டு தெரிந்து கொண்டார்.

கிராம சபை கூட்டத்தில் தென்காசி மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை துணை கலெக்டர் சங்கர நாராயணன், பயிற்சி சப்- கலெக்டர் கவிதா, செங்கோட்டை தாசில்தார் கந்தசாமி, ஆதிதிராவிடர் நலத்துறை ஆய்வாளர் மகேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குழந்தை மணி, மாணிக்கவாசகம், பஞ்சாயத்து தலைவர் ஜாபர் அலி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அதன் பின்னர் திருமலை கோவிலில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சமத்துவ விருந்தில் கலெக்டர் கலந்து கொண்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com