சிறப்பு குறைதீர்க்கும் முகாம்

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
சிறப்பு குறைதீர்க்கும் முகாம்
Published on

சங்கரன்கோவில்:

தன்காசி மாவட்டம் சங்கரன்கோவில் உதவி கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு உதவி கலெக்டர் டாக்டர் சுப்புலட்சுமி தலைமை தாங்கினார். முகாமில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் மூலம் 21 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகைக்கான ஆணையினை அவர் வழங்கினார். முகாமில் சங்கரன்கோவில் தாசில்தார் பாபு, திருவேங்கடம் தாசில்தார் பரமசிவன், சிவகிரி தாசில்தார் பழனிவேல்சாமி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com