திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம்

திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.
திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம்
Published on

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் 35 திருநங்கைகள் கலந்துகொண்டு மருத்துவ முகாம் நடத்த கோருதல், குடும்ப அட்டை மற்றும் வீட்டுமனை பட்டா தொடர்பாக 8 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலருக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட சமூகநல அலுவலர் கோகுலப்பிரியா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com