ஆணவக் குற்றங்களை தடுத்து நிறுத்த சிறப்புச் சட்டம்: எஸ்டிபிஐ செயற்குழுவில் தீர்மானம்


ஆணவக் குற்றங்களை தடுத்து நிறுத்த சிறப்புச் சட்டம்: எஸ்டிபிஐ செயற்குழுவில் தீர்மானம்
x

சென்னையில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்றது.

சென்னை

சென்னையில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நேற்று (ஜூலை, 31) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் மாநில துணைத் தலைவர்கள் அப்துல்ஹமீது, உமர்பாரூக், மாநில பொதுச் செயலாளர்கள் நிஜாம்முகைதீன், அகமதுநவவி, அபூபக்கர்சித்திக், கரீம், மாநிலச் செயலாளர்கள் சபீக்அகமது, ஹமீத்ப்ரோஜ், பாஸ்டர்மார்க், மாநில பொருளாளர் முஸ்தபா மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். சிறப்பு அழைப்பாளர்களாக கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் இல்யாஸ் தும்பே, தேசிய செயற்குழு உறுப்பினர்கள் தெகலான்பாகவி, முகமதுபாரூக் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில், கட்சியின் வளர்ச்சித் திட்டங்கள், எதிர்வரும் தேர்தல் தயாரிப்புகள் உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டு பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்கள்:

1. தமிழக அரசு ஊரக உள்ளாட்சி பகுதிகளில் தொழில் உரிமம் தொடர்பான அரசாணையை திரும்பப்பெற வேண்டும்.

2. தமிழக அரசு ஆணவக் குற்றங்களை தடுத்து நிறுத்த சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும்.

3. செப்டம்பர் 13ம் தேதி எஸ்டிபிஐ கட்சியின் தொகுதி நிர்வாகிகள் மாநாடு திருச்சியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

4. தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை தேர்தல் ஆணையம் கைவிட வேண்டும்.

5. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் ஒன்றிய அரசு தெளிவான, உண்மையான பதிலை வழங்க வேண்டும்.

6. சத்தீஸ்கர் மாநிலத்தில் கேரள கன்னியாஸ்திரிகள் மீதான தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

7. காஸாவில் மனிதாபிமானப் பேரழிவைத் தடுத்திட வேண்டும் ஆகிய தீர்மானங்கள் இந்த மாநில செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

1 More update

Next Story