திருவாரூர் புனித பாத்திமா அன்னை ஆலயத்தில் சிறப்பு திருப்பலி

திருவாரூர் புனித பாத்திமா அன்னை ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது.
Published on

திருவாரூர் வடக்கு வீதியில் அமைந்துள்ள புனித பாத்திமா அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு ஆலய மணி ஒலிக்கப்பட்டு ஏசு கிறிஸ்து அவதரித்ததை நினைவு கூரும் வகையில் ஏசு சொரூபத்தை தேவாலயத்தில் இருந்த கிறிஸ்தவர்களுக்கு காண்பிக்கப்பட்டது. இதனையடுத்து ஆலயத்தில் வடிவமைத்து வைக்கப்பட்டிருந்த குடிலில் ஏசு சொரூபம்வைக்கப்பட்டு அதற்கு தூபம் காண்பிக்கப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு புனித பாத்திமா அன்னை ஆலயம் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com