

கன்னியாகுமரி,
தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மறைசாட்சி தேவசகாயம், கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் போப் ஆண்டவரால் புனிதராக ஏற்றுக்கொள்ளப்பட்டார். அதன்படி மறைசாட்சி தேவசகாயத்திற்கு புனிதர் பட்டத்தை பேப் ஆண்டவர் வழங்கும் நிகழ்ச்சி, வாடிகன் நகரிலுள்ள ரோமில் இருக்கும் கத்தோலிக்க திருச்சபையில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
காலை 10 மணிக்கு (இந்திய நேரப்படி மதியம் 1.30 மணி அளவில்) போப் ஆண்டவர் பிரான்சிஸ் கன்னியாகுமரியை சேர்ந்த மறைசாட்சி தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம் வழங்கினார். இதற்கான அறிமுக நிகழ்ச்சியின் போது அங்கு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.
அதே சமயம் கன்னியாகுமரி மாவட்டத்தில், புனிதர் பட்டம் பெற்ற தேவசகாயம் மறைந்த இடமான ஆரல்வாய்மொழியில் நேற்று சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதனை தொடர்ந்து தேர் பவனி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் சுற்றுப்புற ஊர்களில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.