தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

திருவாரூரில் தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
Published on

திருவாரூர் நகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு நகர மன்ற தலைவர் புவனப்பிரியா செந்தில் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் அகிலா சந்திரசேகர், நகராட்சி ஆணையர் மல்லிகா முன்னிலை ஆகியோர் வகித்தனர். நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் வைஷ்ணவி தேவி தலைமையில் மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் டாக்டர் குருதேவ், திருவாரூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுநர் ரமேஷ் குமார், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் தங்கராமன், காசநோய் சிகிச்சை மேற்பார்வையாளர் பிரேம் ஆனந்த், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர் பிரபாகரன் ஆகியோர் தூய்மை பணியாளர்களுக்கு கண் பரிசோதனை, ரத்த சக்கரை அளவு, ரத்த அழுத்தம் மற்றும் பொது மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் செவிலியர்கள், ஆய்வக நுட்புநர், மக்கள் தேடி மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com