

அரக்கோணம் ஒன்றியம் செம்பேடு ஊராட்சி குருவராஜபேட்டையில் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க விற்பனையாளர் சங்கம் சார்பில் 8-வது தேசிய கைத்தறி தின விழாவை முன்னிட்டு நேற்று நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். தொடர்ந்து நெசவாளர்கள் 16 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் வங்கியில் கடனுதவி பெறுவதற்கான ஆணையினை வழங்கினார்.
நிகழ்ச்சியில் அரக்கோணம் ஒன்றியக் குழு தலைவர் நிர்மலா சவுந்தர்ராஜன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் அம்பிகா பாபு, அரக்கோணம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சவுந்தராஜன், கூட்டுறவு சங்க தலைவர் கீதா தமிழ்மணி, துணிநூல் கட்டுப்பாட்டு அலுவலர் அகமது பாஷா, துணை ஆய்வாளர் செல்வ கணேஷ் பாண்டியன் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.