பவானி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

புளியங்குடி பவானி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
பவானி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
Published on

வாசுதேவநல்லூர்:

புளியங்குடி அரசு மருத்துவமனை அருகில் முப்பெரும் தேவியர் பவானி அம்மன் கோவிலில் உள்ள பெரியபாளையத்து பவானி அம்மன், நாகக்கன்னி அம்மன், நாகம்மனுக்கு ஆவணி மாத வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4 மணி அளவில் நடை திறக்கப்பட்டு, அம்மன்களுக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர், சந்தனம், குங்குமம் உட்பட 21 வகையான நறுமண பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் முப்பெரும் தேவியர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பெரிய தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து குருநாதர் சக்தியம்மா சொற்பொழிவாற்றினார். காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு அருள் வாக்கு நடைபெற்றது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com