புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டிஉலகளந்த பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைஏராளமான பக்தர்கள் தரிசனம்

புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி உலகளந்த பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனா.
புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டிஉலகளந்த பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைஏராளமான பக்தர்கள் தரிசனம்
Published on

திருக்கோவிலூர், 

திருக்கோவிலூரில் உள்ள பிரசித்தி பெற்ற உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் மகோற்சவம் நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டுக்கான உற்சவம் கடந்த 18-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த உற்சவம் அடுத்த மாதம் 17-ந்தேதி வரைக்கும் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், புரட்டாசி மாதத்தில் முதல் சனிக்கிழமையான நேற்று, பெருமாளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து உலகளந்த பெருமாள் நகை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்து சென்றார்கள்.

விழா ஏற்பாடுகளை கோவில் மடாதிபதி தேகளீச ராமானுஜாச்சாரியார் மேற்பார்வையில் கோவில் தேவஸ்தான ஏஜென்டு கிருஷ்ணன் சாமிகள் தலைமையில் விழா குழுவினர்கள் மற்றும் உபயதாரர்களும் செய்திருந்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com