சிறப்பு பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் முகாம்

சிறப்பு பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் முகாம் இன்று நடக்கிறது.
சிறப்பு பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் முகாம்
Published on

பெரம்பலூர் மாவட்டத்தில் பொது வினியோக திட்டம் சார்ந்த குறைபாடுகளை களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீர்வு காண்பதற்கும் சிறப்பு பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் முகாம் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. முகாம் நடைபெறும் கிராமங்கள் விவரம் வருமாறு:-

பெரம்பலூர் தாலுகா கல்பாடியில் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் தலைமையிலும், வேப்பந்தட்டை தாலுகா வாலிகண்டபுரத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் தனித்துணை ஆட்சியர் தலைமையிலும், குன்னம் தாலுகா வடக்கலூரில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையிலும், ஆலத்தூர் தாலுகா செட்டிகுளத்தில் உதவி ஆணையர் (கலால்) தலைமையிலும் இந்த முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்பந்தமான குறைகளை தெரிவித்து பயனடையலாம்.

இந்த தகவலை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com