சிறப்பு பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் முகாம்கள்; இன்று நடக்கிறது

சிறப்பு பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் முகாம்கள் இன்று நடக்கிறது.
சிறப்பு பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் முகாம்கள்; இன்று நடக்கிறது
Published on

அரியலூர் மாவட்டத்தில் சிறப்பு பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் முகாம்கள் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது. முகாம் நடைபெறும் இடங்கள் விவரம் வருமாறு:-

அரியலூர் வட்டாரத்திற்கு சின்னப்பட்டாகாடு, உடையார்பாளையம் வட்டாரத்திற்கு கீழக்குடியிருப்பு, செந்துறை வட்டாரத்திற்கு ஆதனக்குறிச்சி, ஆண்டிமடம் வட்டாரத்திற்கு விளந்தை (தெற்கு) ஆகிய 4 கிராமங்களில் முகாம் நடக்கிறது. கூட்டத்தில் பொதுமக்கள் ரேஷன் கடைகள் தொடர்பான குறைகளை தெரிவித்தும், மின்னணு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு மாற்றம் செய்தல், புதிய ரேஷன் கார்டு, நகல் மின்னணு குடும்ப அட்டை, மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் ஆகியோருக்கு அங்கீகார சான்று வழங்குதல், குடும்ப தலைவர் இறந்திருந்தால் அவரது புகைப்படத்தை மாற்றம் செய்வதற்கு, புதிய குடும்ப தலைவரின் புகைப்படத்துடன் விண்ணப்பம் செய்தல் உள்ளிட்டவை மேற்கொள்ளலாம். மேலும் தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்களை அளித்து நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்-2019-ன் படி பயன்பெறலாம், என்று கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com