நவராத்திரியையொட்டி ஓசூர் சோமேஸ்வர சாமி கோவிலில் சிறப்பு பூஜை

நவராத்திரியையொட்டி ஓசூர் சோமேஸ்வர சாமி கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
நவராத்திரியையொட்டி ஓசூர் சோமேஸ்வர சாமி கோவிலில் சிறப்பு பூஜை
Published on

ஓசூர்

ஓசூர் நெசவுத்தெருவில் உள்ள சோமேஸ்வர சாமி கோவிலில் நவராத்திரி விழா கொண்டாப்பட்டது. இதையொட்டி தினமும் சாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. நிறைவு நாளான நேற்று விஜயதசமியையொட்டி விநாயகர், சோமேஸ்வர சாமி, அம்மன், முருகன், துர்க்கையம்மன் ஆகிய சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து நகரின் முக்கிய பகுதிகளின் வழியாக விநாயகர் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் கோவிலில், மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் வீர சைவ லிங்காயத்து சமூகத்தினர் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com