முப்பெரும் தேவியர் பவானி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

புளியங்குடி முப்பெரும் தேவியர் பவானி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
முப்பெரும் தேவியர் பவானி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
Published on

வாசுதேவநல்லூர்:

புளியங்குடி அரசு மருத்துவமனை அருகில் உள்ள முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் உள்ள பெரியபாளையத்து பவானி அம்மன், நாககன்னி அம்மன், நாகம்மன் கோவிலில் தை மாத கடைசி வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், குங்குமம், திருநீறு, நறுமணப் பொருள்கள் உள்பட 21 வகையான அபிஷேகம் நடைபெற்றது. பின்பு மஞ்சள் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு பெரிய தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மாதாந்திர வெள்ளிக்கிழமை சிறப்பு அருள்வாக்கு கோவில் குருநாதர் சக்தியம்மா தலைமையில் நடந்தது. மதியம் அன்னதானம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com