வாராகி அம்மனுக்கு சிறப்பு பூஜை

ஆவணி மாத அமாவாசையையொட்டி வாராகி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
வாராகி அம்மனுக்கு சிறப்பு பூஜை
Published on

திண்டுக்கல் அருகே கம்பிளியம்பட்டியில் வரசித்தி வாராகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில், ஆவணி மாத அமாவாசையையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. அதன்பிறகு அம்மனுக்கு தீபாராதனை காட்டப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. பூசாரி குமாரசாமி தலைமையிலான குழுவினர் பூஜைகளை செய்தனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். இதைத்தாடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை வாராகி அறக்கட்டளை தலைவர் சஞ்சீவி செய்திருந்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com