காலபைரவர் கோவில்களில் சிறப்பு பூஜைகள்

காலபைரவர் கோவில்களில் சிறப்பு பூஜைகள்
Published on

தேய்பிறை அஷ்டமியையொட்டி கால பைரவர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

தேய்பிறை அஷ்டமி

கிருஷ்ணகிரி அருகே கல்லுக்குறிக்கி பெரியஏரி மேற்கு கோடியில் உள்ள காலபைரவர் கோவிலில், நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை, 7 மணிக்கு கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், மஹாலட்சுமி ஹோமம், காலபைரவ மஹா ஹோமம், காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனையும், தீர்த்தப்பிரசாதமும் வழங்கப்பட்டன. பகல் 12 மணிக்கு கால பைரவர் உற்சவமும், பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடந்தன.

இதில் ஏராளமான பெண்கள் பூசணியில் விளக்கேற்றி நேர்த்திக் கடன் செலுத்தினார்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டன.

வழிபாடு

இதே போல், கிருஷ்ணகிரி அடுத்த சூரன் குட்டையில் உள்ள தட்சிண காலபைரவர் கோவில் மற்றும் கந்திகுப்பம் காலபைரவர் கோவிலில், தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தன.

இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com