சித்திவிநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள்

சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சித்திவிநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
சித்திவிநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள்
Published on

சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பழைய சப்-ஜெயில் சாலை சித்தி விநாயகர் கோவிலில் நேற்று மாலை 6 மணிக்கு சிறப்பு பூஜை நடந்தது. விநாயகருக்கு, 608 லிட்டர் பால் அபிஷேகமும், மஞ்சள், குங்குமம், விபூதி, சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகமும் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் நெய்விளக்கு ஏற்றி வழிபட்டனர். சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதே போல், கிருஷ்ணகிரி காந்திசாலை வரசித்தி விநாயகர் கோவில், புதிய வீட்டு வசதி வாரியம் வினைதீர்த்த விநாயகர் கோவில், பழையபேட்டை கொத்தபேட்டா ஞான விநாயகர் கோவில், பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வரசித்தி விநாயகர் கோவில், காந்திநகர் வலம்புரி விநாயகர் கோவில், சேலம் சாலை ஆதிசக்தி விநாயகர் கோவில் என அனைத்து விநாயகர் கோவில்களிலும் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com