கோவையில் ரூ.70 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கைது

லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரிடம் கொடுக்குமாறு கூறியுள்ளனர்.
கோவையில் ரூ.70 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கைது
Published on

கோவை,

கோவை காட்டூர் காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றுபவர் பூபதி. இவர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த ஒருவரிடம் ரூ.70 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். புகார் அளிக்க வந்தவர் இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் கொடுத்தார்.

அந்த தகவலின் பேரில் விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், ரசாயன பவுடர் தடவிய ரூ.70 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கொடுத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூபதியிடம் கொடுக்குமாறு கூறியுள்ளனர்.

அதன்பேரில், உக்கடம் பேருந்து நிலையம் அருகே வரவழைக்கப்பட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூபதியிடம் புகார்தாரர் ரூ.70 ஆயிரம் வழங்கியபோது, லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com